ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய  வாலிபர் கைது
X

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் (பைல் படம்)

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜேந்திரன் (31) கூலித்தொழிலாளி.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாணதிரையன் பட்டினம் கிராமம் கல்சாவடி தெருவைச் சார்ந்த சுப்பிரமணியன் மகள் ஆர்த்தி (17)என்பவரை காதலித்து வந்தார்.

இருவீட்டார் சம்மதம் இன்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது ஆர்த்தி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பரிசோதனைக்காக இடையார் துணை சுகாதார நிலையம் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது ஆர்த்தியின் ஆதார் அட்டையை செவிலியர்கள் கேட்டுள்ளனர். ஆதார் அட்டையை கொடுத்துள்ளார். அதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில் 17 வயதே ஆகி இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த கிராம செவிலியர் அமுதா த.சோழன்குறிச்சி கிராம சுகாதார நிலையத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

அறிக்கையினை பார்த்த வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தற்காக ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!