கங்கைகொண்டசோழபுரம்மேம்பாட்டு குழுமம் நடத்திய ஆடி18 சப்பர தேர் திருவிழா

கங்கைகொண்டசோழபுரம்மேம்பாட்டு குழுமம் நடத்திய ஆடி18 சப்பர தேர் திருவிழா
X

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி 18 சப்பர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் தலைமையில் ஆடி 18 சப்பர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆடிப் பெருக்கு எனும் ஆடி மாதம் 18-ம் நாள் என்பது தமிழர் திருநாள் நீரை வணங்கும் தமிழரின் பண்பைப் பறைசாற்றும் விழா. அந்நாளில் தமிழகத்து அனைத்து இடங்களிலும் நீரினை வழிபடும் நிலை இன்றும் உள்ளது. நீரினை பெண்ணாக காவிரித்தாயாக கருதி அதற்கு கருகமணி வளையல் காது ஓலை மஞ்சள், குங்குமம், பூச்சரம் மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசி வைத்து வழிபாடு செய்து அதை நீருக்கு காணிக்கையாக்கி அந்நீர்நிலையில் விடுவது இவ்விழா வழிபாட்டு முறையில் ஒன்று. காவேரி ஓடும் பகுதியிலும் பேரேரிகளிலும் ஊர் குளங்களிலும் இது மிகச் சிறப்பாக நடைபெறும் நிகழ்வு இன்றும் தொடர்கிறது.

இந்நாளில் சிறார்கள் பெருமகிழ்வோடு சப்பரங்கள் செய்து அதை அவரவர் வீட்டிலிருந்து நீர்நிலை வரை இழுத்து சென்று அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர். அந்த சப்பரத்தை செய்வதில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவர். யார் சப்பரம் சிறப்பானது என்பதில் போட்டிபோடுவார்கள்.

வளரும் இளம் தலைமுறையின் படைப்பாற்றல் பெருக்கத்தை ஊக்கப்படுத்தும் பண்பு அதில் இருக்கிறது. இன்று அது அருகிவருகிறது. அதை மீளுருவாக்கம் செய்யும் வகையில் சிறார்கள், இளைஞர்களிடம் ஊக்கப்படுத்த சப்பரத்திருவிழாவை கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழுமம் முன்னெடுத்தது.

தமிழ்தாய் படம் தாங்கிய சப்பரத்தேரோட்டம் கங்கைகொண்டசோழீஸ்வரர் பெரியகோவில் கீழவீதியிலிருந்து காலை 8.00 மணியளவில் புறப்பட்டு அணைக்கரை வந்தடையுமாறு திட்டமிடப்பட்டது.

ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் இருந்து சப்பரம் திருவிழா நடைபெறுவதற்கு காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை. இதனை அடுத்து தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலாம் ஆண்டு சப்பரம் திருவிழா கொண்டாடப்பட்டது.

அணைக்கரை பகுதியில் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் முதலாம் ஆண்டு ஆடி 18 சப்பரத் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன் கலந்து கொண்டார்.

இந்த விழாவானது பண்பாட்டு மீளுருவாக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் படி துவங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் சிறந்த சப்பர தேருக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் 5000, மூன்றாம் பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படுகிறது இந்த விழாவில் தமிழ் தாய் படம் தாங்கிய சப்பர தேர்கள். ராஜேந்திர சோழனின் புகழை பறை சாற்றும் வகையில் சிறுவர்கள் தேர்களை ஆர்வத்துடன் இழுத்து வந்தனர்.

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் குடந்தை ஸ்ரீ பாலாஜி கன்ஸ்ட்ரக்சன்நிர்வாக இயக்குநர் பொறியாளர் தமிழ்மறவன் கோமகன், விழாக்குழுவினர் ஜெயங்கொண்டம் மங்களம் மருத்துவமனை டாக்டர் ஹரிஹரசுதன் மாசிலாமணி, கங்கைகொண்ட சோழபுரம் பாரதி ஆங்கிலப்பள்ளி பொறியாளர் நவீன் பிரபாக் மகாதேவன், ஜெயங்கொண்டம் மார்டன் கல்விக்குழுமம் துணைத் தலைவர் முனைவர் சுரேஷ் இராஜேந்திரன், வாழக்குட்டை வழக்கறிஞர் கனல் ஆதித்தன் பாலு, அணைக்கரை கோகிலாம்பாள் கல்விக்குழுமம் செயலர் பொறியாளர் சுயம்பிரகாசம் அன்பழகன், நவீன் இராமச்சந்திரன் ராமஜெயலிங்கம், சிங்கப்பூர் கங்கைகொண்டான் கழகம் விமலப்புகழன் புருஷோத்தமன், கங்கைகொண்டசோழபுரம் தியாகராச ரைஸ்மில் கார்த்திகேயன் மோகன், ஜெயங்கொண்டம் ஜி.ஆர்.எஜிகேஷ்னல் சர்வீசஸ் பொறியாளர் வினோத்ராஜ், வில்வகுளம் அக்சரா சி.பி.எஸ்.சி.மேல்நிலைப்பள்ளி செயலர் பொறியாளர் அமிர்தேவ் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!