கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடக்கம்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடக்கம்.
X

கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கியது

ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்குவதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக தொல்லியல் துறை மூலம் 2020- 21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.


அந்த வரிசையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில் கடந்த மார்ச்சு மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது இதனை தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் அலை தீவிரமாக வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதை கருத்தில் கொண்டு மாளிகைமேடு அகழாய்வுப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல் துறை சார்பில் கடந்த 10ஆம் தேதி அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு அடைந்து வரும் நிலையில் கீழடி, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த வரிசையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியிலும் அகழாய்வு பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அகழாய்வு பணிகள் நடைபெறுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்குப் பிறகு அவரது பணிகள் தொடங்கி இருப்பதால் பணிகளை விரைந்து சோழர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் திறந்தவெளியில் இருக்கின்றன. இதன் காரணமாக கடந்த சில சில தினங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கி ஆனால் ஆயுதங்கள் சேதமடைந்து இருந்தன. மேலும் இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் அகழாய்வு நடைபெறும் இடங்களை மழைநீர் தேங்காதபடி, உரிய முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story