ஜெயங்காெண்டம் அருகே அனுமதியின்றி விநாயகர் சிலை: இந்து முன்னணியினர் 5 பேர் கைது
கீழசிந்தாமணி கிராமத்தில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 5 பேரை போலிசார் கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் 3 அடி விநாயகர் சிலையை சொந்த இடத்தில் இடத்தில் வைத்து வழிபாடு செய்துள்ளார்.
இதனைஅறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் சிலையை அகற்ற அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தனது சொந்த இடத்தில் அரசு அறிவித்தபடி வழிபாடு செய்து வந்ததாக வெற்றிச்செல்வன்கூறி சிலையை அகற்ற மறுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கலைகதிரவன் மற்றும் காவல்துறையினர் இந்து முன்னணி பொறுப்பாளர்களான ஒன்றிய தலைவர் விஜய், ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன், மற்றும் குமரகுரு, கோகுல், மணிகண்டள் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்தனர்.
மேலும் விநாயகர் சிலையை அருகில் உள்ள சிவன் கோவிலில் எடுத்துசென்று போலிசார் வைத்துள்ளனர். கீழ்சிந்தாமணி கிராமத்தில் வீடுகளில் வெளியில் வைக்கப்பட்ட சிலைகளை, வீட்டின் உள்ளே வைத்து வழிபட பொதுமக்களை அறிவுறுத்தி உள்னர். இச்சம்பவம் இந்து முன்னணியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu