இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் : தொடங்கி வைத்த எம்எல்ஏ

இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் : தொடங்கி வைத்த எம்எல்ஏ
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் எம்எல்ஏ முன்னிலையில் நடந்த கண்புரை அறுவைச்சிகிச்சை முகாம்

நான்கு நாட்கள் நடைபெறும் முகாமில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் மார்டன் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில், பார்வை இழப்பு தடுப்புசங்கம், ராயல் சென்ட்டீரியல் லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இனைத்து நடத்திய மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

நான்கு நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் லயன்ஸ் சங்கமண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மாடர்ன் கல்வி நிறுவன துணைத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி