பொன்னேரி மீன்பிடி திருவிழாவில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகில் ராஜேந்திர சோழனால் விவசாய பயன்பாட்டிற்காகவும், குடிநீர் பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்பட்டது பொன்னேரி. இந்த ஏரியில் இருந்த தண்ணீர் வற்றி, ஆங்காங்கே சிறிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. குட்டை போல் தேங்கி உள்ள தண்ணீரில், மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனையடுத்து மீன்களை பிடிப்பதற்காக, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஏரியில் குவிந்தனர். சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன்களை பிடித்துச் சென்றனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் இவ்வகையான சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காரணங்களினால், கிராமப்புறங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மீன் பிடிப்பதாக கூறி அதிக அளவில் மக்கள் சமூக இடைவெளியின்றி, ஒரே இடத்தில் கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைபிடிக்கும் வகையில், உரிய நடவடிக்கை மற்றும் அவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu