அரியலூர் அருகே செப்டிக்டேங்கினுள் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு மீட்பு

அரியலூர் அருகே செப்டிக்டேங்கினுள் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு  மீட்பு
X

அரியலூர் அருகே செப்டிக்டேங்கினுள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கபட்டது.

அரியலூர் அருகே மதனத்தூர் கிராமத்தில் செப்டிக் டேங்கினுள் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான கருவுற்ற பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.

அப்போது சுமார் 20 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்க் மீது பசுமாடு நடந்தபோது எதிர்பாராத விதமாக டேங்க்உடைந்து மாடு உள்ளே விழுந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கருவுற்ற பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருவுற்ற பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture