அரியலூரில் கொரோனா விதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம்

அரியலூரில் கொரோனா விதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம்
X

அரியலூரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

அரியலூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைக்காட்டி நான்கு வழிச்சாலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருள் பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மளிகை கடை, பெட்டி கடை, துணிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 20 கடைக்காரர்களுக்கு 200 ரூபாய் வீதம் என மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு முகக்கவசத்தை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கைகாட்டியில் உள்ள கடைகளில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்தும்,

சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்