அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வினியோகம்

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வினியோகம்
X

சூரியமணல் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு   இடுபொருட்களை  ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களை எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், சூரியமணல் கிராமத்தில்,வேளாண்மைத்துறை சார்பில், தமிழக முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் 2021-22 மூலம் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர்.பழனிசாமி தலைமை தாங்கினார். முதல் கட்டமாக 20 விவசாயிகளுக்கு 20கிலோ உளுந்துவிதை மற்றும் உயிர் உரபொருள்களை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

வேளாண் உதவி அலுவலர் வி.செல்வம், ஒன்றியகுழு உறுப்பினர் வி.ரமேஷ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மதுரை மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!