பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து விவசாயி மகள் சாதனை
மாணவி சிவானி.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த அரியலூர் விவசாயி மகள் சாதனை.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இவரது மகள் ஷிவானி என்பவர் 600-க்கு, 595 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 97 மதிப்பெண்களும், கணிதம் இயற்பியல், வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் இதுபற்றி சாதனை மாணவி சிவானி தெரிவிக்கையில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எனது பெற்றோர்கள் மிகவும் கடினப்பட்டு என்னை படிக்க வைத்துள்ளனர். எனது பெற்றோரின் நம்பிக்கையை வீணடிக்காமல் நல்ல முறையில் மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும், எனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆவதே எனது விருப்பம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu