அரியலூரில் பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூரில் பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

அரியலூரில் பெய்த மழை.

அரியலூரில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளான தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், சிலால், உடையார்பாளையம், சுத்தமல்லி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசீ வருகிறது. கோடை விவசாயத்திற்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோடை மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!