முன்னாள் ராணுவவீரர் காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

முன்னாள் ராணுவவீரர் காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
X

தீ குளிக்க முயன்ற நபரால் பரபரப்பாக காணப்பட்ட காவல் நிலையம்.

ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன்பு, புகார் அளித்த முன்னாள் ராணுவ வீரர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவருக்கு குப்புசாமி, வெங்கடேசன், ராமநாதன் என மூன்று மகன்கள் உள்ளனர். ராமநாதன் ஓய்வுபெற்ற துணை இராணுவ வீரர். இந்நிலையில் குடும்ப சொத்துக்களை மூன்று பேருக்கும் சரிபாதியாக பாகம் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டதில் மூன்று பேருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ராமநாதன் தன் மகனுக்கு அவருடைய பாகத்தை தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத குப்புசாமி மகன், செந்துரை ரோட்டிலுள்ள மாணிக்க நகரில் உள்ள வீட்டில் இருந்த ராமநாதன் அவரது மனைவி குழந்தைகளான பிரவீன் காந்தி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. தனித்தனியாக பாகம் பிரிக்கப்பட்டு உள்ளது. பிரித்த பாகத்தில் கால் வைக்கக் கூடாது என்று குப்புசாமி மகன் பிரவீன் காந்தி தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். மேலும் சென்ற ஆண்டு இருவருக்கும் அடிதடி நடந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ராமநாதன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பிரவீன்காந்தி மீது புகார் அளித்தார். புகாரின் மீது இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியதாக ராமநாதன் கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!