ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
X

மின் விபத்து நடந்த பகுதி. 

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தண்டபாணி. இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது உணவருந்திவிட்டு கைகளைக் கழுவுவதற்காக தண்ணீரை ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டு அதிலிருந்து தண்டபாணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!