ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை பசுமாடு உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை  பசுமாடு உயிரிழப்பு
X

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் சினை பசுமாடு இறந்தது.

ஜெயங்கொண்டம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற சினை பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமனல் கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் ஜெயங்கொண்டம் அருகே 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த சினை பசுமாடு ஒன்று இன்று காலை திருச்சி-சிதம்பரம் சாலையில் மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது சாலையோரத்தில் இருந்த தெரு விளக்கு மின் கம்பம் அருகிலிருந்த செடி, கொடிகளை பசுமாடு தின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் கீழ்ப் புறத்தில் இருந்த எர்த் மின் வயரில் பசு மாட்டின் உடல் பட்டது.

இதில் மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தெரு விளக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இறந்த பசு மாட்டின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!