திமுக வேட்பாளர் சிவசங்கர் சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்

திமுக வேட்பாளர் சிவசங்கர்  சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்
X
குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேவனூரில் செலுத்தினர்.

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தனது வாக்கை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் சொந்த ஊரான தேவனூரில் செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று வாக்களிப்பு காலை 7 மணிக்கு துவங்கியது. அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமாகிய எஸ்.எஸ்.சிவசங்கர் தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவனூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் வாக்காளர்கள் நிற்கவும், அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது.மேலும் உள்ளே செல்லும் முன் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைகளுக்கு உறை அணியச் செய்து வாக்களிக்க அனுமதித்தனர்


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!