ஜெயங்கொண்டம் தொகுதியில் 13 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

ஜெயங்கொண்டம்  தொகுதியில்   13 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு
X
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 13வேட்பாளர்கள் போட்டி சின்னங்கள் ஒதுக்கீடு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு இருபத்திரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிறகு, 13 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்கள் யாரும் வாபஸ் பெறாததால் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் இறுதியாக 13வேட்பாளர்கள் களம் காணுவதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உடையார்பாளையம் தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத் அறிவித்தார்.

இதில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சொர்ணலதாவிற்கு ஆட்டோ ரிக்க்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சொர்ணலதா, பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, திமுக வேட்பாளர் கண்ணன், அமமுக வேட்பாளர் ஜெ.கொ.சிவா, நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நீ.மகாலிங்கம், பகுஜன் சமாஜ்வாடி பார்ட்டி வேட்பாளர் க.நீலமேகம், அண்ணா திராவிடர் கழகம் ஆ.நடராஜன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் ஏழு பேருடன் ஆறு சுயேச்சைகளான வி.கே.கேசவராஜன், ரா.சதீஸ்குமார், அ.சாமுவேல் மார்டின், க.சுடர்விழி, ரா.சேதுராமன், சா.ராஜ்குமார் ஆகிய 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.




Tags

Next Story