அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள மணகெதி, நாயகணைப்பிரியாள் ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிடங்கள் மற்றும் அம்பாபூர் ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தா.பழூர் ஒன்றியத்தில் மணகெதி, நாயகணைப்பிரியாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள், அம்பாபூர் 8-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் தற்போது காலியாக உள்ளது. மேற்காணும் பதவியிடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களும், அம்பாபூர் ஊராட்சியில் 1 வாக்கச்சாவடி மையங்களும் என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, மணகெதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையக்கட்டங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிகளுக்காக மேற்காணும் வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story