காடுவெட்டி குருவின் சிலைக்கு மாலையணிவித்து பாமக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது.
அதிமுக கூட்டணியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளராக அதன் செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு(51) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வாழகுட்டை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கலியமூர்த்தி தாயார் தமிழரசி. இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவியும் கனல் ஆதித்தியன், வசீகரன் என 2 மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றார். இவர் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மதுபான கடை அமைக்க தடை விதிக்க வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் எட்டுவழிசாலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இட ஒதுக்கீடு, சுற்றுச்சூழல், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தில் உள்ள மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் குருவின் சிலைக்கு மாலையணிவித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள முக்கியபிரமுகர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சென்று அக்கட்சி தொண்டர்களை சந்தித்து தனக்கு முழுஆதரவு அளித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu