முன்னாள் எம்எல்ஏ கணேசன் சிலைக்கு மாலையணிவித்து திமுக தேர்தல் பிரச்சாரம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.சொ.க.கண்ணன் அரியலூர் மாவட்டம் கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை க.சொ.கணேசன் இந்த தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருடைய மனைவி மாலதிகண்ணன் தா.பழூர் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர். மகள் மதுமிதா எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் ஆதித்யா கணேஷ் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். .
திமுக வேட்பாளராக போட்டியிடும் கண்ணன், எம்.காம் படித்துள்ளார். 18 ஆண்டுகள் ஒருங்கிணைந்த தா.பழூர் ஒன்றிய தி.மு.க ஒன்றிய செயலாளராகவும், 2018ல் இருந்து தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் கட்சி பொறுப்பில் உள்ளார். மேலும் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றியுள்ளார். தனது தந்தை க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் உடல் நலிவுற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயிலஉதவி செய்து வருகிறார். கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து தா.பழூர் மெயின்ரோட்டில் உள்ள தனது தந்தையும் நான்குமுறை ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏவுமான க.சொ.கணேசன் சிலைக்கு மாலையணிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள முக்கியபிரமுகர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மதிமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சென்று அக்கட்சி தொண்டர்களை சந்தித்து தனக்கு முழுஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu