போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம்
ஜெயங்கொண்டத்தில் போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்தி வாழ்வதற்காக மன மற்றும் மருத்துவ ரீதியான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமை தாங்கினார்.அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் போதை பொருட்களை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், அந்த பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போதை பழக்கத்தில் இருந்து திருந்தி வாழ நினைப்பவருக்கு அரசு உதவும் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் சுகாதார துறை துணை இயக்குனர் கீதாராணி, டாக்டர் அன்பழகி ஜெயங்கொண்டம் ரோட்டரி கிளப் செல்வராஜ், தா. பழூர் ஆசிரியர் செங்குட்டுவன், ஜெயங்கொண்டம் ஆசிரியர் ராஜா மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்டத்தில் போதை பயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu