ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில்  மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டத்தில் குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியார் சிலை அருகில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களை கொண்ட அலங்கார வாகனங்களை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் திராவிட கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. நகர செயலாளர் வெ.கொ. கருணாநிதி, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன், நகரகாங்கிரஸ் தலைவர் மணிகண்டன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!