கஞ்சா விற்பனைசெய்கிறீர்களா? சீருடை இல்லாத போலீசார் கேட்டதால் வாலிபர்கள் தகராறு
ஜெயங்கொண்டம் அருகே வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்கிறீர்களா? என கேட்ட சீருடை இல்லாமல் வந்த போலீசாரால் பரபரப்பு. வாலிபர்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு. வாலிபர்கள் 3 பேர் கைது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்த அருமைராஜ் மகன் சுனில் (20), அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லதுரை மகன் தமிழ்ச்செல்வன் (20), கொளஞ்சி மகன் சரவணன் (19) ஆகிய 3 பேரும் கல்லாத்தூர் தக்கலை அருகே உள்ள மங்களத்து ஏரி அருகே வாலிபால் விளையாடி கொண்டிருந்ததாகவும், அப்போது போலீஸ் சீருடை அணியாமல் மப்டியில் சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வாலிபர்களிடம் கஞ்சா வைத்துள்ளீர்களா? கஞ்சா குடிக்கிறீர்களா? விற்பனை செய்கிறீர்கள்? என கேட்டதால் தகராறு ஏற்பட்டதாகவும், நீங்கள் யார்? உங்களுக்கு இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை எதற்காக எங்களை இப்படி தவறாக சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்?என வாலிபர்கள் கேட்டதாகவும், இதில் ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு ஏற்பட்டு தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் கெஞ்சி, மன்றாடி, அழுது, புலம்பி, ரோட்டில் அழுது புரண்டு சாலை மறியல் செய்து போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தாங்கள் பிள்ளைகள் மூன்று பேரையும் வெளியே விட வேண்டும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. எந்த குற்றமும் செய்யவில்லை அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வேறுவழியின்றி போலீசார் பெற்றோர்கள் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 3 பேரையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
காலை போலீஸ் நிலையத்திற்கு 3 பேரையும் அழைத்து வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பும் என பெற்றோர்களும் உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும் தெரிவித்துச் சென்றனர். போலீசார் அந்த மூன்று பேர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மீண்டும் சாத்தான்குளம் பிரச்சனை போல் பெரிதாகக் கூடிய சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu