தேர்தல் அறிக்கையின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்: கனிமொழி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கா.சோ. கண்ணனை ஆதரித்து திமுக மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவியுமான கனிமொழி ஆண்டிமடத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழகத்தில் மின்துறை ரயில்வேத்துறை உள்ளிட்ட வேறு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு வழங்க வேண்டிய வேலை வாய்ப்புகள் மற்ற மாநிலத்தவருக்கு தாரைவார்க்க படுகிறது. இதனால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய சுமார் 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி அதில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படும். தற்போது உள்ள அதிமுக அரசு பல்வேறு துறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் செய்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் நகரப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், கல்வி கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, குழுவாக செயல்படும் ஆண்களுக்கும் குறைந்த வட்டியில் தொழில் தொடங்க கடன் உதவி, கொரோனா நிவாரண உதவி தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களும் தமிழக மக்களுக்கு கிடைக்கும். எனவே வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu