இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்
X

விக்கிரமங்கலத்தில் முகாமில் உள்ள மக்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.


விக்கிரமங்கலத்தில் முகாமில் உள்ள மக்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அரசநிலையிட்டான் கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த வீடுகளில் வசிப்போர் விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியன் ரெட் கிராஸ் அரியலூர் கிளை சார்பில் போர்வை, பாய், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். தா.பழூர் நிர்வாகக் குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றியக்குழு தலைவர் மகாலெட்சுமி, ஊராட்சி தலைவர் கலியபெருமாள், ரெட் கிராஸ் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் எழில், செயலாளர் ஸ்டீபன், முன்னாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் குணசேகரன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!