தா.பழூர் ஒன்றியத்தில் 206 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வினியோகம்
பயனாளி ஒருவருக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் 2018 - 19 ஆம் ஆண்டுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 206 பயனாளிகளுக்கு தலா ஒரு பயனாளிக்கு எட்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 206பயனாளிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பரசி, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.செந்தில்குமார்(வ.ஊ),, எம்.அன்புச்செல்வன் (கி.ஊ), மகளிர் நலத்திட்ட அலுவலர் ரேவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu