கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய பக்தர்கள்

கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய பக்தர்கள்
X

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில், தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


ஆடிபெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்யாமல் பக்தர்கள் திரும்பினர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடிபெருக்கு விழாவுக்கு தடைவிதிக்கப்பட்டதால் ஆறு, கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று பகுதிகளான திருமானூர், தா.பழூர் ஒன்றியத்திலும், அனைக்கரை கொள்ளிடம் ஆற்றிலும் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆடிப்பெருக்கு விழாவில் கொள்ளிடம் ஆற்றில் கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, குல தெய்வங்களின் உடைமைகள் மற்றும் உற்சவ மூர்த்திகளை காவிரியில் சுத்தம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு எடுத்துச்செல்வது வழக்கம்.

மேலும் புதுமணத் தம்பதிகள் ஆற்றில் நீராடி, புத்தாடைகள் அணிந்து, கடவுளை வழிப்பட்ட பின்னர், பெண்கள் தங்களது தாலிக்கொடியை மாற்றி அணிந்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களுக்கு கொள்ளிடம் கரையோரப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் புனித நீராடவும், ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனால் இன்று ஆடிப்பெருக்கு விழாவில் மக்கள் கூட்டம் இன்றி கொள்ளிடம் ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், திருமானூர் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் தரிசனம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கொள்ளிடம் ஆறு மற்றும் கோவில்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil