அரியலூர் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அரியலூர் அருகே தா.பழூர் அஞ்சலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு , இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தா.பழூர் கடைவீதியில் உள்ள அஞ்சலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு , இந்திய கம்யூனிஸ்டு , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா. பழூர் கடைவீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலை கடுமையாக உயர்வதால், உயர்த்திய விலையை திரும்பப் பெற வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதிவாரியாக வேலை வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பழூர் தபால் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!