அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்

அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆண்டிமடம் இந்து முன்னணியினர் சாலக்கரை கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாலக்கரை கிராமத்தில் இரட்டை பிள்ளையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சுற்றுச்சுவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கோவில் சுற்றுச்சுவரை இடித்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரர், அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும். சாலைக்கரை கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் சாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தாசில்தார் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரளாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளியில் காத்திருந்த ஒரு மூதாட்டிக்கு திடீரென ஆக்ரோஷத்துடன் சாமி வந்து ஆட்டம் ஆடினார். அவருடன் வந்திருந்த பெண்கள் அவரை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். இதனால் சற்று நேரம் அங்கே பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!