/* */

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்திடவும். தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை கைவிடவும், வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்கிடவும், பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களான மக்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 -இல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதை முன்னிலைப்படுத்தியும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக தொ.மு.ச. மாவட்ட துணைத்தலைவர் சம்பந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தேசத்தை கூறு போட்டு விற்பவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்போம் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை தொடர்ந்து கையாண்டு வரும் ஒன்றிய மோடி அரசே என்ற கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 22 March 2022 3:49 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  2. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  3. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!