வரதராஜன்பேட்டை தொன்பொஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 58-வது விளையாட்டு விழா

வரதராஜன்பேட்டை தொன்பொஸ்கோ மேல்நலைப்பள்ளியில் 58-வது விளையாட்டு விழாவை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

தொன் பொஸ்கோ பள்ளியில் விளையாட்டு விழா


ஜெயங்கொண்டம் தொகுதி,வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள தொன்பொஸ்கோ மேல்நிலைப்பள்ளியில்நடந்த 58-வது விளையாட்டு விழாவில், மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது..

ஜெயங்கொண்டம் தொகுதி,வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள தொன்பொஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 58-வது விளையாட்டு விழா நடந்தது.

விழாவுக்கு தாளாளர் பிரான்சிஸ் கமாலியேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செபாஸ்டின் ஜாக்கப் வரவேற்றார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், விழாவை துவக்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் தென்னூர் பங்குத்தந்தை லியோ,பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன், பேரூராட்சி தலைவர் மார்க்ரெட் அல்போன்ஸ்,துணைத்தலைவர் எட்வின் ஆர்தர், ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், பேரூர் கழக பொறுப்பாளர்கள் அல்போன்ஸ், செல்வம், முன்னாள் தலைவர் அந்தோணிசாமி, தொ.மு.ச ஹென்றி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் காஸ்பர் ஜோசப் நன்றி கூறினார்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!