ஜெயங்கொண்டத்தில் கோர்ட் சிராஸ்தார் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

ஜெயங்கொண்டத்தில் கோர்ட் சிராஸ்தார் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
X

ஜெயங்கொண்டத்தில் கொள்ளை நடந்த கோர்ட்டு சிராஸ்தாரின் வீடு.

ஜெயங்கொண்டத்தில் கோர்ட் சிராஸ்தார் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்துச் சென்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா அரியலூர் கோர்ட்டில் சிராஸ்தார் ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் ஜெயங்கொண்டம் வேலாயுதம்நகர் முதல் கிராசில் வாடகை வீட்டில் தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மாடிவீட்டில் காற்று இல்லாத காரணத்தால், பூட்டிவிட்டு கீழே உள்ள வீட்டில் வந்து படுத்து தூங்கியுள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

அப்போது மாடியில் உள்ள இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, வீட்டின் கதவு பூட்டை உடைத்து அறைக்குள் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள்,மற்றும் பாத்திரங்களில் மூடி வைத்திருந்த சில்லறை நகைகள் மற்றும் ரூபாய் 2000 ரொக்கம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர்.

கொள்ளையில் துப்பு துலக்குவதற்காக போலீஸ் மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து அரியலூரில் இருந்து மோப்ப நாய் டிக்சி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் போலீசார் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future education