ஜெயங்கொண்டம் அருகே கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

ஜெயங்கொண்டம் அருகே கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
X

ஜெயங்கொண்டம் அருகே கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

ஜெயங்கொண்டம் அருகே மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இலையூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது குற்றம் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.திருமேனி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பொது மக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பது, ஊறல் போடும் நபர்களை பற்றி தகவல் தெரிவிப்பது, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பது குறித்தும், புகார்களை எவ்வாறு காவல் துறையினருக்கு தெரியப்படுத்துவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இதற்கு அரசாங்கம் அளித்துள்ள இலவச தொலைபேசி எண் 10581 பற்றி விளக்கப்பட்டது. தொடர்ந்து, மது மற்றும் பிற போதை பழக்கத்தின் பாதிப்பு குறித்தும், மீள்வதற்கு உள்ள வழிமுறைகளை குறித்தும், உடலில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கோரியம் பட்டி ஊராட்சி தலைவர் தங்கம் அறிவழகன், காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகர் பகுத்தறிவாளன், அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!