ஜெயங்கொண்டம் நகராட்சி முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோதல்

ஜெயங்கொண்டம் நகராட்சி முதல் கூட்டத்தில்  கவுன்சிலர்கள் மோதல்
X

ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரை பேச விடாமல், தி.மு.க. கவுன்சிலர் குறுக்கிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.


ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலரை பேச விடாமல், தி.மு.க. கவுன்சிலர் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. 1வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட 12 வது தி.மு.க. கவுன்சிலர் அம்பிகாபதி அ.தி.மு.க. தலைவர்கள் புகழ் பாடக் கூடாது என்று பேசினார்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் 4வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஜெயங்கொண்டம் நகர மன்ற துணைத் தலைவர் சமரசம் செய்ததையடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story