பருத்தி விவசாயிகள் இருப்பு வைத்து ஏலத்தில் விற்க அழைப்பு
விற்பனைக்கு தயாராக உள்ள பருத்தி முட்டைகள்
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கானிப்பாளர் சு.குமரகுருபரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இந்த மறைமுக ஏலத்தில் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அதனால் ஏலம் நடைபெறவிருக்கும் வியாழன் கிழமைக்கு முதல் நாளான இன்று பருத்தி விவசாயிகள், தங்களின் பருத்தியை நன்கு உலரவைத்து ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்து, அடுத்த நாள் ஏலத்தில் விற்று பயனடையுமாறு விற்பனைக்கூட கண்கானிப்பாளர் சு.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொலைபேசி எண் 9865639680, 8760328467 என்ற எண்னை தொடர்புகொள்ளவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu