அரியலூரில் கொரோனா தடுப்பூசி முகாம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், வெண்மான்கொண்டான் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டம், வெண்மான்கொண்டான் மற்றும் நாச்சியார்பேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியே பாதுகாப்பானதாகும்.
ஆகவே தமிழ்நாடு முதல்வரின் அறிவுரையின்படி, கொரோனா வைரஸ் மாபெரும் தடுப்பூசி முகாம் அரியலூர் மாவட்டத்தில் 400 இடங்களில் 40,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் , தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் தற்பொழுது பெரும் சவலாக விளங்கி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு குடும்பத்திலுள்ள 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்
மாவட்ட ஆட்சித்தலைவர், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், இராயபுரம், செந்துறை, பெரியாக்குறிச்சி, மருவத்தூர், பொன்பரப்பி, ஆதனகுறிச்சி, வாரியங்காவல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு, முகாமில் அதிக அளவிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, வட்டாட்சியர்கள் குமரய்யா (செந்துறை), முத்துகிருஷ்ணன் (ஆண்டிமடம்), ஆனந்தன் (ஜெயங்கொண்டம்) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu