அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில்5ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தகுதியுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 47,125 நபர்களுக்கும், இரண்டாம் தடுப்பூசி முகாம்களில் 17,944 நபர்களுக்கும், மூன்றாம் தடுப்பூசி முகாம்களில் 50,941 நபர்களுக்கும், நான்காம் தடுப்பூசி முகாம்களில் 32,311 நபர்களுக்கும் என மொத்தம்; 1,48,321 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி 300 முகாம்களில் நடைபெற்றது.
மேலும், தாலுகா அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கீழவெளி, ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், தண்டலை, இறவாங்குடி, உட்கோட்டை, தழுதாழைமேடு, கொல்லாபுரன், மீன்சுருட்டி பாப்பாக்குடி, வங்குடி ஆகிய கிராமங்களிலும் மற்றும் தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம், தேவாமங்கலம் ஆகிய கிராமங்களிலும் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும்,
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu