கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X
ஜெயங்கொண்டம் கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் வசதிகளுக்காக போர்கால அடிப்படையில் படுக்கை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனா நோய் தொற்றை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் தடுப்பூசிகளை தகுதியான அனைவருக்கும் செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தமிழக அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி சோப்புபோட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்ந ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்த் (ஜெயங்கொண்டம்), முத்துகிருஷ்ணன் (ஆண்டிமடம்), நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!