கபசுர குடிநீர் வழங்கிய காவல்துறையினர்

கபசுர குடிநீர் வழங்கிய காவல்துறையினர்
X
காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீர் விநியோகம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இருந்தாலும் பொதுமக்கள் கடைவீதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியைஉண்டாக்கக்கூடிய கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தா.பழூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் கலந்துகொண்டு கடைவீதியில் நடமாடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், மாஸ்க் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!