கொரோனாவில் இறந்தவரின் குடும்பத்திற்கு கிரைண்டர்: போலீஸ் ஐ.ஜி. வழங்கினார்

கொரோனாவில் இறந்தவரின் குடும்பத்திற்கு கிரைண்டர்: போலீஸ் ஐ.ஜி. வழங்கினார்
X

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு  திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கிரைண்டர் வழங்கினார்.


ஜெயங்கொண்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்திற்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கிரைண்டர் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் கருப்பையா நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சிலமாதங்களுக்கு முன்னர் கொரோனாவில் இறந்துள்ளார். அவரது மறைவிற்கு பின்னர் அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ரைஸ் தொண்டு நிறுவன இயக்குனர் அருள்தாஸ் பெரிய கிரைண்டர் ஒன்றை வாங்கிதர முன்வந்தார்.

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், ரைஸ் தொண்டு நிறுவன இயக்குனர் அருள்தாஸ் வழங்கிய கிரைண்டரை கொரோனாவில் இறந்த கோபாலகிருஷ்ணன் மனைவி கீதாவிடம் ஒப்படைத்தார். கிரைண்டர் மூலம் தினந்தோறும் அரிசிமாவு அரைத்து தனது வருமானத்தை பெருக்கிகொள்வேன் என்று கீதா கூறியதற்கு வாழ்த்து தெரிவித்த ஐ.ஜி பாலகிருஷ்ணன், அவரது நம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்