அரியலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா
X

மாதிரி படம் 

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1249 பேர். இதில் முதல் தடுப்பூசியை 911 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

21ம் தேதி கொரோனா நிலவரம்:

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 24 பேர். மருத்துமனைகளில் 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 15,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,042 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 687 பேர். இதுவரை 2,45,233 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,558 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,29,675 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,425. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,15,042. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 32,062 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,651 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 30,308 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 103 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1249 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 911 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 338 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 2 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.




Tags

Next Story
ai based agriculture in india