தொடர் மழையிலும் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தினக்கூலி பெண்கள்

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தினக்கூலி பெண்கள் வயலில் இறங்கி களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் குடை மற்றும் பாலிதீன் கவர்களை தலை மற்றும் உடலில் கட்டிக்கொண்டு நெற்பயிர் நடவு செய்துள்ள வயலில் இறங்கி தினக்கூலி விவசாய பெண்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றுப் பாசனம் மற்றும் மோட்டார் பாசனங்கள் மூலம் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நெல் நடவு செய்த வயலில் களை எடுக்கும் பணியில் விவசாய தினக்கூலி பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அதேபோல் ஸ்ரீபுரந்தான் பகுதியில் மோட்டார் பாசனம் மூலம் நெல் நடவு பணியில் நடைபெற்று வருகிறது.

தினக்கூலி விவசாய பெண்கள் நாளொன்றுக்கு 150 லிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும் ஒரு நாள் சம்பளத்திற்காக கொட்டும் மழை, வெயில் பாராமல் வேலை செய்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள செலவு மற்றும் குழந்தைகள் படிப்பு உட்பட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவும் ஆகையால் கொட்டும் மழையிலும் வேலை செய்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story