விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஜெயங்கொண்டத்தில் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஜெயங்கொண்டத்தில் ஆலோசனை கூட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு கூட்டம் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கலைக் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.


Vinayagar Chaturthi in Tamil - விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஜெயங்கொண்டத்தில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

Vinayagar Chaturthi in Tamil -ஆகஸ்டு31- ல் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு கூட்டம் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கலைக் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் உடையார்பாளையம் வேலுச்சாமி, ஆண்டிமடம் முத்துக்குமரன், மீன்சுருட்டி பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் சிலைகள் அங்கே பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் போன்றவை அமைப்பதற்கான சில உத்தரவுகளை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரசாயனத்தால் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை, சிலைகள் 4 முதல் 5 அடி உயரத்திற்கு மேல் அமைக்கக்கூடாது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சிலைகளை தவிர புதிய சிலைகள் வைக்க கூடாது புதிய வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது சிலைகள் அமைக்கும் இடம் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வண்ணம் சாலையோரமாக அமைத்திருக்க வேண்டும். சிலை அமைவிடத்தில் கொட்டகை அமைக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய கீற்றுக் கொட்டகை அமைக்க கூடாது. தகர சீட்டால் கொட்டகை அமைக்க வேண்டும், வாகனங்கள் கொண்டு அமைக்க கூடாது.

சிலை அமைக்கும் இடத்தில் தீயணைப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும். பாதுகாப்புக்காக சிலை அமைப்பு கமிட்டி மூலம் ஒரு சிலைக்கு மூன்று நபர்கள் என நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று நபர்களே சிலையை பாதுகாக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாக்க வேண்டும். பாதுகாவலர் பெயர், முகவரி, கைபேசியில் விவரங்கள், சிலை அமைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

சிலை இருக்கும் இடத்தையோ அல்லது ஊர்வலத்தின் போது கண்டிப்பாக வெடி வெடித்தல் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பயன்படுத்த கூடாது. விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள பிற மதத்தினர் குடியிருப்பு, சர்ச், மசூதி ஆகியவற்றின் அருகில் ஆரவாரம் செய்வது, மேளம் அடிப்பது, கோஷங்கள் எழுப்புவதை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையின் ஓரமாக ஊர்வலம் செல்லுதல் வேண்டும். ஊர்வலம் எப்போதும் அனுமதி வழித்தடத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முடிக்கப்பட வேண்டும். காலையில் இரண்டு மணிநேரம், மாலை இரண்டு மணி நேரம் வேலையின் போது மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்கள் ஆறு மணிக்குள் சிலைகளை கரைக்க ஏதுவாக ஊர்வலத்தில் முன்கூட்டியே ஆரம்பிக்கவேண்டும்.

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகள் வழிமுறைகளை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு சீரான போக்குவரத்து மற்றும் சட்ட வழிகளில் கருத்தில் கொண்டு, போலீசார் அவ்வப்போது வழங்கும் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை தவறாது அனைவரும் பின்பற்ற வேண்டும.

மேலும் மது போதையில் ரகளை ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சிலை அமைப்பவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2019-ல் 139 சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதே ஆட்கள், அதே இடத்தில், சிலை வைக்கவும், எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊர்வலமானது ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் இருந்து பஸ் நிலையம் அண்ணா சிலை வழியாக அணைக்கரைக்கு சென்று சிலைகள் போலீசாரின் அறிவுரைப்படி பிரதிஸ்டை செய்ய வேண்டும் என ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story