ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கொத்தனார் செல்லையா.

சின்னவளையம் கிராமத்தில் கட்டிட வேலை செய்த கொத்தனார் செல்லையா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிப்பு.

ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் அழகு மணிகண்டன் என்பவரது வீடு கட்டும் பணி பணியில் செல்லையா என்பவர் ஈடுபட்டிருந்தார். மாடியில் கம்பியை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி தர்ம பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா (54). இவர் கட்டிடம் கட்டும் சென்ட்ரிங் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும்(42) ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் சின்னவளையம் மெயின்ரோட்டி.ல் உள்ள அழகு மணிகண்டன் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த செல்லையா முதல் மாடியில் இரும்புக் கம்பிகளை மாடியில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் முன்பாக மேலே உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக பட்டதால், செல்லையா தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் கீழே விழுந்தார்.இதையடுத்து அவரை காப்பாற்ற அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கட்டைகளுடன் நின்று தடுக்க முயற்சித்தனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் செல்லையாவை பரிசோதித்தபோது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து முயற்சித்தனர். இருப்பினும் அவரை காப்பாற்ற இயலவில்லை. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

கட்டிட வேலைக்கு சென்றவர் மின்சாரம் பாய்ந்து இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் அவரது மனைவி லதாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து போலீசார் செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!