அரியலூரில் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

அரியலூரில் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சிவகுமார்.

அரியலூரில் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சிவக்குமார். இவர் அரியலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று பணியை முடித்து வீட்டிற்குச் சென்ற சிவகுமார், இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காலையில் தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது சிவக்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் நான் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன். தான் வாங்கிய கல்வி கடனில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பாக்கி கட்ட வேண்டி உள்ளது அத்தொகை எனது வங்கிக் கணக்கில் இருப்பும் வைக்கப்பட்டுள்ளது. எனது தந்தையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார், மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதத்தில் இருந்ததால், இதனால் மன அழுத்தம் ஏற்பட்டதற்கு அலுவலக பணியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!