கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : ஆட்சியர் தொடக்கம்
ஜெயங்கொண்டம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோ ஆப் டெக்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியாக 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெசவாளர் கைவண்ணத்தில் உருவான கைத்தறி சேலைகள், படுக்கை விரிப்புகள், வேஷ்டி, துண்டு ரகங்கள் ,பருத்தி சட்டைகள் என ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளது.
சென்ற ஆண்டு தஞ்சை மண்டலத்தில் 749.15 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தஞ்சை மண்டலத்தில் 1300 லட்சங்கள் மதிப்பீட்டில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஜெயங்கொண்டம் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு 27. 85 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 50 லட்சங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவை முன்னிட்டு நிர்வாக குழு உறுப்பினர் லெனின், மண்டல மேலாளர் அம்சவல்லி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu