சினிமா பாணியில் உடையார் பாளையம் உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி
உடையார் பாளையம் அருகே தனியார் ஓட்டலில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
வெண்ணிலா கபடி குழு என்ற திரைப் படத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தப்படும். இதில் நடிகர் சூரி அதிக புரோட்டா சாப்பிட்டு வெற்றி பெறுவார். நடிகர் சூரிக்கு இந்த படமும், புரோட்டா சாப்பிடும் போட்டியும் ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இன்று அவர் சிறந்த காமெடி நடிகராக மடடும் அல்லாமல் கதாநாயகன் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
இதுபோன்ற ஒரு புரோட்டா சாப்பிடும் போட்டி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை கிராமத்தில் இயங்கி வரும் மச்சான்ஸ்கறி உணவகத்தில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உணவுத்திருவிழா என்ற பெயரில் புரோட்டா போட்டி நடைபெற்றது.
போட்டியின் விதிமுறைகள்
இதன்படி மாலை 7மணிமுதல் இரவு 9மணிவரை மட்டுமே. தனிநபர் போட்டி. 30நிமிடங்களில் 10 புரோட்டா சாப்பிட்டால் சாப்பிட்ட புரோட்டாவுக்கு பணம் கொடுக்க தேவை இல்லை. அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். 10புரோட்டா சாப்பிட முடியாதவர்கள் அவர்கள் சாப்பிட்ட புரோட்டாவுக்கான பணம் செலுத்தவேண்டும்.
4பேர்கொண்டகுழு போட்டி
ஒவ்வொரு போட்டியும் 30 நிமிடங்கள் நடைபெறும். ஒரு டேபிளுக்கு 4பேர் அமரவேண்டும். நண்பர்களாகவோ அல்லது வேறு நபர்களுடனோ சேர்ந்து அமரலாம். ஒரு டேபிளில் 4பேர் அமர்ந்தபின்னரே போட்டி துவங்கப்படும். ஆண், பெண் என அனைத்து வயதினர்களும் பங்கேற்கலாம்.
30 நிமிடங்களில் ஒரே டேபிளில் அமர்ந்துள்ள நால்வரில் யார் அதிக எண்ணிக்கையில் புரோட்டா உண்ணுகிறாரோ அவரே அந்த டேபிளின் வெற்றியாளர்.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 புரோட்டா உண்ணவேண்டும். முழுமையாக உண்ணப்படும் பரோட்டா மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.போட்டி முடியும்வரை கண்டிப்பாக வாந்தியெடுக்கக்கூடாது.
வெற்றியாளர் தவிர டேபிளில் எஞ்சியுள்ள மூவரும் தாங்கள் உண்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையின் படி இந்த போட்டி நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு டேபிளிலும் இளைஞர்கள் சப்ளையர்கள் கொண்டு வந்த புரோட்டா மற்றும் சால்னாவை போட்டி போட்டுக் கொண்டு பதம் பார்த்தனர். சிலர் ஆர்வக்கோளாறல் உண்ண முடிந்தாலும் போட்டியின் இலக்கை எட்ட முடியாமல் பரிதவித்தனர்.
அதேநேரத்தில் சினிமாவில் வரும் புரோட்டா சூரி போல அரியலூரில் நடைபெற்ற போட்டியிலும் சூரியா என்ற இளைஞர் போட்டியில் வெற்றி பெற்றார்.
போட்டியில் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியன் என்பவர் 10க்கும் மேற்பட்ட புரோட்டாக்களை அசால்டாக சாப்பிட்டு முதலிடத்தை பெற்று பரிசு பணம் 100 ரூபாயை பெற்றார். சினிமா நடிகர் சூரி போல் இருவரும் சூரியன் என்ற பெயரில் வெற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் புரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கு பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu