அரியலூர்: சித்தமல்லி நீர்த்தேக்கம் உபரிநீர் வெளியேற்றத்தை கலெக்டர் ஆய்வு

அரியலூர்: சித்தமல்லி நீர்த்தேக்கம் உபரிநீர் வெளியேற்றத்தை கலெக்டர் ஆய்வு
X

ஜெயங்கொண்டம் ஒன்றியம் பொன்னேரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை  கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்து வரும் கனமழையினால் நீர்நிலைகள் உயர்ந்து வருகிறது. அவ்வாறு நீர்நிலைகளில் மழைநீர் காரணமாக உயர்ந்து வரும் உபரி மழைநீரை ஏரியின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தா.பழூர் ஒன்றியம், சித்தமல்லி நீர் தேக்கம் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியம், பொன்னேரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (18.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டங்கள், மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, வடகிழக்கு பருவமழையினால் நீர்நிலைகளில் உயர்ந்து வரும் மழைநீரினை பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. 226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்தேக்கத்தில் தற்பொழுது 191.746 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும், தற்சமயம் வினாடிக்கு 368 கனஅடி நீர் நீர்தேக்கத்திற்கு வருகிறது. நீர்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 175 கனஅடி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீர் தேக்கத்திற்கு வருகை தரும் மழைநீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நீர்தேக்கத்திற்கு அதிகபடியான மழைநீர் வரும் பட்சத்தில் அதனை வெளியேற்றிடவும், நீர்தேக்கத்தின் கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பலவீனமான இடங்களில் மணல் மூட்டைகள் அடக்குவதற்காக 1000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், சித்தமல்லி நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உரிநீரானது வாய்க்கால்கள் வழியாக கொள்ளிடத்திற்கு சென்று சேரும். இந்நிகழ்வில் வாய்க்கால்களில் வெளியேற்றப்படும் உபரிநீரின் மூலமாக ஊரக பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையினரால் நீர்தேக்கத்தை தொடர்ந்து கண்காணித்திடவும், சீரான அளவில் உபரிநீரை வெளியேற்றிடவும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போது வரை 83.25 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு 150 கனஅடி நீர்வரத்தும், இதிலிருந்து 70 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யபட்டும் வருகிறது. வெளியேற்றப்படும் நீரானது வாய்க்கால் வழியாக வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.

ஏரியின் பாதுகாப்பு கருதி 500 மணல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலவீனமான இடங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கரையை பலப்படுத்திடவும், வாய்;க்கால்களில் ஏதேனும் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் கரைகளை பலப்படுத்தவும் பயன்படும். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரினால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமலும் விவசாய நிலங்கள் வெள்ளநீரினால் சூழாமலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்களை தயார் செய்யவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்தஆய்வின்போது, உதவிசெயற்பொறியாளர் சாந்தி, வட்டாட்சியர் ஆனந்தன், உதவிப்பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!