ஜெயங்கொண்டத்தில் மூதாட்டியின் செயினை பறித்த வாலிபர் கைது
ஜெயங்கொண்டம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மனைவி மருதாயி. (80) இவர் நேற்று முன்தினம் மாலை காக்காபாளையத்திலிருந்து காசாங்கோட்டை செல்லும் சாலையில், அருகில் உள்ள அவரது நிலத்தில் கடலைக்கு களை எடுத்து கொண்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், மருதாயி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து ஓட முயன்றார். அவரது கையை பிடித்துக்கொண்டே மருதாயி அலறியபடி உதவிக்கு குரல் எழுப்பினார். எனினும் அவரை தள்ளிவிட்டு, வாலிபர் தப்பினார்.
இது குறித்து, உடையார்பாளையம் காவல்நிலையத்தில் மருதாயி மகன் கருணாநிதி புகார் அளித்தார். விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது, வி கைகாட்டி அருகே நாகமங்கலம் அடுத்த காஞ்சிலிக் கோட்டை தெருவை சேர்ந்த தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்க்கும் ஜெயராமன் மகன் முருகன் (29)என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu