அரசு மருத்துவமனை பெயர்ப்பலகை காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

அரசு மருத்துவமனை பெயர்ப்பலகை காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
X

நுழைவு வாயிலில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுகிறது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையின் பெயர் பலகையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தற்போது தலைமை அரசு மருத்துவமனையாக இயங்கி வருகிறது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெயர் பலகையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் அவ்வழியே நோயாளிகள் செல்லாமல் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சிலர் மாற்று வழியில் சென்று வருகின்றனர்.

மேலும் தரமற்ற முறையில் கட்டப்பட்ட பெயர்பலகை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளதால் பொதுமக்கள், நோயாளிகளின் நலன் கருதி உயிரிழப்பு ஏற்படும் முன், சீர் செய்ய வேண்டும் அல்லது பெயர்ப்பலகை இடித்து அகற்றி விட்டு புதிதாக பெயர் பலகை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business