/* */

செல்போன் திருட்டு: திட்டியதற்கு கத்தி குத்து..!

ஜெயங்கொண்டம் அருகே செல்போனைபறி கொடுத்தவர் திருடியவரை திட்டினார்.. இதனால் கோபம் கொண்டு கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செல்போன் திருட்டு: திட்டியதற்கு கத்தி குத்து..!
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது செல்போன் காணாமல் போய் விட்டதாக கூறி இலையூர் கோரியம்பட்டி பகுதியில் தேடியதாகவும், அப்போது செல்போனை எடுத்தவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியில் அங்கு நின்று கொண்டிருந்த பாபா என்கின்ற பிரபாகரன் என்பவர் யாரை திட்டுகிறாய்? என கேட்டு திட்டி தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் கையில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த சக்திவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவாறு சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பிரபாகரன் மீது வழக்கு பதிந்து கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார். பாபா என்கின்ற பிரபாகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...